அணி 2024

இலங்கை விஷேட பொது வைத்திய நிபுணர்களின் சங்கமானது நாட்டிலுள்ள அனைத்து விஷேட பொது வைத்திய நிபுணர்களும் (Visiting Physicians-VP))அங்கம் வகிக்கும் சங்கமாகும்.

நாங்கள் எல்லாவகையான தொற்றுநோய்கள் ,தொற்றா நோய்கள்,சிக்கல் நிறைந்த நோய்கள்,என்பவற்றில் நிபுணத்துவம் பெற்று அந்நோய்களை நிர்ணயம் செய்வதிலும் அவற்றுக்கான முழுமையான சிகிச்சைகளை அளிப்பதிலும் பெரும் பங்காற்றிவருகின்றோம்.

அத்தோடு வைத்தியசாலைகளில் மருத்துவநோய்களிற்கான அவசர நிபுணத்துவ சிகிச்சை வழங்குவதிலும் விஷேட பொது வைத்திய நிபுணர்களின் பங்கு முக்கியமானது.

நோயாளர்களின் உடல்,உள,சமூகம் சார்ந்த பிரச்சனைகளை பூரணமாகவும், தீர்க்கமாகவும் ஆராய்ந்து அவற்றுக்கான தகுந்த சிகிச்சைகளையும் அறிவுரைகளையும் வழங்கும் நாம் இந்த வலைத்தளத்தினூடாக பொதுவான நோய்கள் பற்றிய சரியான அறிவை பொதுமக்கள் மற்றும் நோயாளர்களாகிய உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றோம், அத்தோடு உங்களுக்கு நோய்கள் சம்பந்தமான ஏதேனும் சந்தேகம் இருப்பினும் கேட்டு பயன்பெறுவதும் இந்த வலைத்தளத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.எல்லோரும் வாசித்து பெரும் பயன்பெறுக.

“எப்பொருள்யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு”(குறள் 423)
-இலங்கை விஷேட பொது வைத்திய நிபுணர்கள் சங்கம்