உயர் குருதி அழுத்தம்

உயர் குருதி அழுத்தம் என்றால் என்ன?

கிளினிக்கில் குருதி அழுத்தம் இரு வேறு சந்தர்ப்பங்களில் 140/90அஅர்ப யை விட அதிகமாக இருப்பின் உயர் குருதி அழுத்தம் எனப்படும்.

உயர்குருதி அழுத்தம் நீண்டகால உடற்பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாரடைப்பு, பாரிசவாதம் சிறுநீரக பாதிப்பு, இதய செயலிழப்பு, பார்வைக்குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் உயர்குருதி அழுத்தத்தினால் 7.5 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. அண்ணளவாக இலங்கையில் மூன்றில் ஒருவருக்கு உயர் குருதி அழுத்தம் இருக்கிறது.

குருதி அழுத்தப்பரிசோதனை எப்பொழுது மேற்கொள்ளப்படும்?

உங்களது வயதிற்கும் நோய் நிலைமைக்கும் ஏற்ப குருதி அழுத்தப் பரிசோதனை செய்யும் கால இடைவெளி மாறுபடும்.

இலங்கையில் 35 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வருடத்தில் ஒரு முறையாவது தங்களது குருதி அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும். எனினும் நீரிழிவு, அதிகரித்த உடற்பருமன், பாரிசவாதம், மாரடைப்பு, உடற்பயிற்சி குறைவானவர்கள் மற்றும் கொலஸ்ரோல் (கொழுப்பு) பிரச்சினையுள்ளவர்கள் குறுகிய கால இடைவெளிகளில் அவர்களது குருதி அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.

உயர் குருதி அழுத்தத்தின் அறிகுறிகள் என்ன?

பெரும்பாலானவர்களுக்கு எந்த ஒரு அறிகுறிகளும் இருப்பதில்லை. எனவே குருதி அழுத்தத்தை பரிசோதிப்பதனால் மட்டுமே இனங்காண முடியும். சில வேளைகளில் பின்வரும் அறிகுறிகள் இருக்கலாம்.

  • சத்தி
  • தலைச்சுற்று
  • பார்வை குறைதல்
  • காதில் இரைச்சல்

இவ் அறிகுறிகளானது மிக உயர் குருதி அழுத்தத்தின் அல்லது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் நிலைக்கு குருதி அழுத்தம் ஏற்படும் போது மட்டுமே வெளிக்காட்டப்படும்

உயர் குருதி அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் எவை?

  • பெரும்பாலானவர்களுக்கு எந்தவொரு காரணமும் இருப்பதில்லை
  • எனினும் பின்வரும் காரணிகள் இருப்பவர்களுக்கு உயர் குருதி அழுத்தம் ஏற்படும் சாத்தியக்;கூறுகள் அதிகம்
  • நீரிழிவு
  • உயர் கொலஸ்ரோல் (கொழுப்பு)
  • குடும்பத்தில் யாருக்காவது உயர் குருதி அழுத்தம் இருத்தல்
  • அதிகரித்த உடற்பருமன்

சுகாதாரமற்ற உணவுப்பழக்கங்கள் (அதிகரித்த உப்புப்பாவனை, அதிகரித்த நிரம்பிய கொழுப்புப் பாவனை, குறைந்த அளவு பழங்கள், காய்கறிகளின் பாவனை)

சிறுநீரகக்கோளாறு, நீரிழிவு, உயர் கொலஸ்ரோல் (கொழுப்பு)

இளவயதில் உயர் குருதி அழுத்தம் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இக்குழுவினரை இனங்காண வேண்டியது மிக முக்கியமானது.

  • புகைப்பிடித்தல்
  • அதிகரித்த மதுபாவனை
  • அதிகரித்த உப்புப்பாவனை
  • உடற்பயிற்சியின்மை
  • மன அழுத்தம்
  • சிறுநீரகக் கோளாறு
  • நோய் நிவாரணிகள்;, ஆயுர்வேத மருந்துகள், போதைப்பொருள் பாவனை என்பன உயர்குருதி அழுத்தத்தை ஏற்படுத்தும்.

குருதி அழுத்தத்தை அளவிடுதல் எப்படி?

குருதி அழுத்தமானது நேரம், மனநிலை (உதாரணம் கோபம்) உடற்பயிற்சி என்பவற்றோடு மாறுபடும். எனவே உங்கள் ஆரம்ப குருதி அழுத்தம் அதிகமாக இருப்பின் உங்கள் வைத்தியர் உங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் குருதி அழுத்தத்தை அளிவிடுமாறு கேட்டுக்கொள்வார்.

ஒரு குருதி அழுத்த வாசிப்பு அதிகமாக இருப்பதனால் உயர் குருதி அழுத்தம் என கூறமுடியாது

உங்கள் குருதி அழுத்தம் அதிகமாகக் காணப்படின் உங்கள் வைத்தியர்; உங்களை பின்வரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குருதி அழுத்தத்தை பரிசோதிக்குமாறு கேட்டுக் கொள்வார். அவையாவன.

  • கிளினிக்ஃ பொது வைத்திய நிபுணர்
  • வீட்டில்
  • நாளாந்த செயற்பாட்டின் போது (நடமாடும் குருதி அழுத்த அளவீட்டுக்கருவி) உயர் குருதி அழுத்தத்தை கண்டுபிடிப்பதற்கான சிறந்த முறை இதுவேயாகும்.

சிலவேளைகளில் வைத்தியரிடம் செல்லும்போது மட்டும் உங்கள் குருதி அழுத்தம் அதிகமாகலாம். இச்சந்தர்ப்பத்தில் வீட்டில்ஃ நாளாந்த செயற்பாட்டின் போது உங்கள் குருதி அழுத்தத்தை பரிசோதிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

குருதி அழுத்தத்தை அளவிடும் போது செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாதவை எவை?

  • கோப்பி மற்றும் கபின் அடங்கிய பானங்களைத் தவிர்க்கவும்
  • உடற்பயிற்சி செய்வதாயின்ஃ புகைப்பிடிப்பதாயின் குறைந்தது 30 நிமிடங்களிற்கு முதல் செய்யவும்
  • சிறுநீரை முற்றாக வெளியேற்றிய பின் குருதி அழுத்தத்தை அளவிடவும்
  • கதிரை ஒன்றில் குறைந்தது 5 நிமிடங்கள் சௌகரியமாக அமர்ந்த பின்பே குருதி அழுத்தத்தை அளவிடவும்.
  • முதுகு மற்றும் கைகள் கதிரையில் ஓய்வாக இருக்கும் போதே அளவிடவும்
  • பாதங்கள் இரண்டும் நிலத்தில் இருக்க வேண்டும். கால்கள் குறுக்காகப் போடாமல் இருத்தல் வேண்டும்
  • மேற்கைப்பகுதி இதயத்தின் மட்டத்தில் இருக்குமாறு கையை வைத்திருக்கவும்
  • அமைதியான சூழலில் அளக்கப்படவேண்டும்
  • மேற்கைப்பகுதியில் உள்ள ஆடையினை அகற்றவும். அளவீட்டுக்கருவி ஆடையின் மேல் பயன்படுத்தக்கூடாது
  • அமைதியாகவும் பிறருடன் கதைக்காமலும் இருக்கும் போது அளவிடவும்

உயர் குருதி அழுத்தத்தின் பின் விளைவுகள் எவை?

உயர் குருதி அழுத்தம் உடலின் பெரும்பாலான அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவையாவன இதயம், மூளை, சிறுநீரகம், இரத்த நாடிகள் மற்றும் கண்கள்

  • ஆரம்பகட்டத்தில் சிகிச்சை தொடங்கப்படுமாயின் பாதிப்புக்களை சரி செய்ய முடியும்
  • நீண்டகால உயர் குருதி அழுத்தத்தினால் அங்கங்களில் ஏற்படும் பாதிப்புக்கள் குருதி அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்தாலும் சரி செய்ய முடியாது
  • உயர்குருதி அழுத்தமானது நீரிழிவு, ஈரலில் கொழுப்பு படிதல,; அதிகரித்த உடற்பருமன், உயர் கொலஸ்ரோல் (கொழுப்பு) என்பவற்றோடும் காணப்படலாம்

குருதி அழுத்தத்திற்கான சிகிச்சை முறைகள் என்ன?

  • வாழ்க்கை முறை மாற்றம் (அனைத்து நோயாளர்களுக்கும்)
  • மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தல்

எவ்வாறு வாழ்க்கை முறை மாற்றத்தை ஏற்படுத்தல் வேண்டும்?

  • அதிக உடற்பருமனாயின் உடல் எடையைக் குறைத்தல்
  • இடையின் சுற்றளவு
  • ஆண் < 90cm
  • பெண் < 80cm
  • உணவில் அதிகளவில் மரக்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், தாவரப்புரதங்கள், மீன், என்பவற்றை சேர்த்தல்
  • அதிகளவு இனிப்பு மற்றும் நிரம்பிய கொழுப்பு அடங்கிய உணவுகளை (உதாரணம்: பேக்கரி உணவுகள், துரித உணவுகள் அதிகளவில் பொரித்த உணவுகள்) குறைவாக சேர்த்தல்
  • அன்றாடம் உள்ளெடுக்கும் உப்பின் அளவை 5ப (1 தேக்கரண்டி ஆகப் பேணுதல்
  • சோறு சமைக்கும் போது உப்பு சேர்ப்பதைத் தவிர்த்தல்
  • கருவாடு உண்ணும் போது நன்றாக கடுநீரில் கழுவி மேலதிகமாக இருக்கும் உப்பை அகற்றிய பின்னர் உண்ணுதல்
  • மேலதிகமாக உப்பிடப்பட்ட உணவுகளை தவிர்த்தல் (முறுக்குஇ சிப்ஸ், பாண், சோஸ், கஜீ)
  • புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பாவனையை முற்றாகத் தவிர்த்தல்
  • மதுபான பாவனையை நிறுத்துதல்ஃ குறைத்தல்
  • மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடல், குறைந்தது நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் வாரத்தில் 5 நாட்கள் (வேகமான நடை, சைக்கிள் ஓடுதல், நீச்சல், வீட்டுத்தோட்டத்தில் ஈடுபடல்)
  • வாரத்தில் 2ஃ3 நாட்கள் எதிர்ப்பு உடற்பயிற்சியில் ஈடுபடுதல்
  • நாளொன்றுக்கு 6 – 8 மணித்தியாலங்கள் தூங்குதல்
  • மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் – யோகாசனம், தியானம், இசைப்பயிற்சி போன்வற்றில் ஈடுபடுதல்

அதிக உப்பு உணவுகள்

  • உப்பு
  • பீட்சா
  • குளம்பு
  • சோய் சோஸ்
  • ஊறுகாய்

அன்றாடம் 1 தேக்கரண்டி உப்பு உள்ளெடுத்தல்

  • மிதமான உடற்பயிற்சி
  • நடத்தல்
  • ஜாகிங்
  • நீச்சல்
  • வீட்டுத்தோட்டம் செய்தல்
  • ஓடு பொறி (டிரெட் மில்)
  • உடற்பயிற்சி கூடம்
  • இருதய உடற்பயிற்சிஃ எதிர்ப்பு பயிற்சி
  • யோகாசனம்ஃ சும்பா

உயர் குருதி அழுத்தத்திற்கான மருந்துகள் எவை?

  • மருத்துவரால் உயர்குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் தொடங்கப்படும் போது அவற்றை மருத்துவரால் நிறுத்தும் வரை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும்
  • உங்கள் வைத்தியரால் குருதி அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவிக்கப்படின், நீங்கள் குருதி அழுத்த மாத்திரைகளை எடுப்பதனாலேயே குருதி அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்; மாத்திரை எடுக்காவிடின் மீண்டும் குருதி அழுத்தம் அதிகரிக்கும.; எனவே வழமையான மாத்திரைகளைத் தொடர்ந்து பாவிக்க வேண்டும்
  • உயர்குருதி அழுத்தத்திற்கு வழங்கப்படும் மாத்திரை வகையானது உங்களது உடல்நிலை மற்றும் உயர் குருதி அழுத்த அளவீட்டில் தங்கியிருக்கும்
  • உயர்குருதி அழுத்தத்திற்கென பலவகை மாத்திரைகள் இருக்கின்றன
    உங்கள் குருதி அழுத்தத்திற்கான சரியான மருந்து அல்லது மருந்துச்சேர்க்கையை கண்டறிவதற்கு சிலகாலம் தேவைப்படும்
  • உங்கள் வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட உயர்குருதி அழுத்த மாத்திரைகளைத் தவறாமல் எடுக்க வேண்டும்
  • உங்களது வைத்தியரின் ஆலோசனை இன்றி மருந்தை மாற்றவேண்டாம்
  • சில மாத்திரைகளை திடீரென நிறுத்தினால் மீண்டும் உயர்குருதி அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது நீங்கள் பண நெருக்கடி அல்லது மருந்தின் பாதக விளைவுகள் சாதாரணமாகஃ மறப்பதன் காரணமாக மருந்து எடுக்கத்தவறின் வைத்தியரிடம் கலந்து ஆலோசித்து மாற்று வழிகளை நாடவும்
  • ஒரே மாத்திரையை தொடர்ந்து பாவிப்பதனால் எந்தவொரு பாதிப்பும் இல்லை இதனால் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படாது

குருதி அழுத்த இலக்குகள் என்ன?

  • குருதி அழுத்த மாத்திரைகளைப் பாவிக்கும் போது குருதி அழுத்த இலக்குகளை தெரிந்திருத்தல் அவசியமாகும்
  • உங்கள் குருதி அழுத்தமானது 140/90அஅர்ப யை விட குறைவாக இருத்தல் வேண்டும்.
  • உங்கள் வைத்தியர் உங்கள் உடல்நிலை மற்றும் நோய் நிலமைகளிற்கு ஏற்ப உங்களுக்கான குருதி அழுத்த இலக்கை தீர்மானிப்பார்

உங்கள் குருதி அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் இல்லாததற்கான காரணங்கள் எவை?

  • குருதி அழுத்த மாத்திரைகளை உட்கொள்ளாமை
  • குருதி அழுத்தத்தை அதிகரிக்கக்கூடிய வேறு மாத்திரைகள் (நோய் நிவாரணிகள்) மது பாவனை போன்றவற்றின் பாவனை
  • உயர் குருதி அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் (உதாரணம்: சிறுநீரகக் கோளாறு)
  • ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் (குறைவான தூக்கம், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்)
  • அதிகரித்த உப்புப்பாவனை
  • மன அழுத்தம்

கொலஸ்ரோல் (Statin) மாத்திரையின் பயன்பாடு என்ன?

உங்கள் வைத்தியரால் மாரடைப்புஃ பாரிசவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு கொலஸ்ரோல் மாத்திரை தேவையா என்பது தீர்மானிக்கப்படும்

எவ்வாறு சிகிச்சையை தொடர்தல் வேண்டும்?

(Follow Up)

  • உங்கள் குருதி அழுத்தமானது கட்டுப்பாட்டிற்குள் இருப்பின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வைத்தியரை நாடுதல் போதுமானது
  • 1 தொடக்கம் 2 மாத இடைவெளியில் வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும்
  • உங்கள் குருதி அழுத்தத்தைக் கட்டுபாட்டிற்குள் வைத்திருப்பது கடினமாயின் குறுகிய கால இடைவெளியில் வைத்தியரை நாடவேண்டும்
  • வருடத்திற்கு ஒருமுறை அல்லது வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் தேவையான பரிசோதனைகளைச் செய்து அங்கங்களின் பாதிப்பை சோதிக்க வேண்டும்

சுருக்கம்

  • உயர் குருதி அழுத்தம் இதயம், சிறுநீரகம், குருதி நாளங்கள், மூளை, கண்கள் போன்ற பல அங்கங்களைப் பாதிக்கும்
  • வாழ்க்கை முறை மாற்றம் எல்லோராலும் பின்பற்ற வேண்டும்
  • குறைவான உப்புப்பாவனை குருதி அழுத்தத்தைக் குறிக்கும்
  • எல்லாவித பகைத்தலையும் நிறுத்துதல்
  • எல்லாவித மதுபாவனையையும் நிறுத்துதல்
  • மிதமான உயிர்வளிக்கோரும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல் (எயிரோபிக் உடற்பயிற்சி)